மும்பை

மும்பை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

சொந்த ஊருக்கு சென்ற இடத்தில் மும்பை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துலே, 

சொந்த ஊருக்கு சென்ற இடத்தில் மும்பை போலீஸ்காரர் தூக்குப்பேட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மந்திராலயாவில் பணி

துலே மாவட்டம் சாக்ரி தாலுகா போபாரா கிராமத்தை சேர்ந்தவர் காலுராம் அகிரே (வயது57). போலீஸ்காரரான இவர் மாநில தலைமை செயலகமான மந்திராலயாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து கொண்டு சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் அருகே இருந்த மாட்டு தொழுவத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரணம் என்ன?

இது பற்றி அறிந்த கிராமத்தினர் சம்பவம் குறித்து பிம்பாலேனர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...