மாவட்ட செய்திகள்

கட்டிட தொழிலாளி படுகொலை

மதுரையில் கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.

மதுரை.

மதுரையில் கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.

கட்டிட தொழிலாளி

மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் பசுபதி (வயது 27), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று இரவு பசுபதி அங்குள்ள வயல்வெளி வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 5-க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் அவரை வழிமறித்து தகராறு செய்தது. பின்னர் அந்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாள், கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டது.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு காண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பசுபதி தனது நண்பருடன் பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு காரணமாக தான் பசுபதி கொலை செய்யப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே போலீசார் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.