புதுச்சேரி

முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

காரைக்காலில் முஸ்லிம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

காரைக்கால்

மனித உரிமைக்கு எதிரான மத்திய அரசின் உ.பா. சட்டத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தி காரைக்காலில் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இன்று கண்டன ஊர்வலம் நடந்தது. காரைக்கால் பெரிய பள்ளிவாசல் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலத்தை காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார்.

இந்த ஊர்வலம் காரைக்கால்-திருநள்ளாறு சாலை, பாரதியார் சாலை, தோமாஸ் அருள் வீதி, காமராஜ் சாலை வழியாக சென்று கடற்கரை சாலையில் நிறைவு பெற்றது. தொடர்ந்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால், திரு-பட்டினம், அம்பகரத்தூர், நிரவி, சேத்தூர், நல்லம்பல், திருநள்ளாறு, புதுத்துறை, நேரு நகர் பகுதி ஜமாத்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மனித உரிமைக்கு எதிரான மத்திய அரசின் உ.பா சட்டத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு