சினிமா துளிகள்

எனக்கு பிடித்த கதை ‘கபடதாரி' - சிபிராஜ்

சிபிராஜ், நந்திதா ஜோடியாக நடித்துள்ள புதிய படம் கபடதாரி. இதில் நடிகர்கள் நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உள்பட மேலும் பலர் நடித்துள்ளனர்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார். தனஞ்செயன் தயாரித்து உள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.விழாவில் நடிகர் சிபிராஜ் பங்கேற்று பேசும்போது, கபடதாரி எனக்கு மிகவும் பிடித்த கதை. திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. இது கன்னட படத்தின் ரீமேக் என்றாலும், தமிழுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்துள்ளோம். ரசிகர்கள் ரசனையில் மாற்றங்கள் வந்துள்ளன. புதுசாக எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் படத்தில் இருக்கும். அனைத்து படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்று தான் எடுக்கிறோம். இந்த படமும் நன்றாக ஓட வேண்டும். இந்த கொரோனா காலத்தில் படத்தை தைரியமாக வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார்.

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி பேசும்போது, கபடதாரி படம் சிறப்பாக வந்துள்ளது. மாஸ்டர் போன்ற பெரிய படங்கள் வெற்றி பெற்றது போல, இந்த படமும் வெற்றி பெற வேண்டும். அதற்கு விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்