படத்தின் கதைப்படி, நயன்தாரா 20 நிமிடங்கள் கழித்தே படத்தில் தோன்றுகிறார். நயன்தாராவுக்காக கதையை மாற்ற முயன்று இருக்கிறார், டைரக்டர் கோபி நயினார். அவரிடம், கதையை மாற்ற வேண்டாம். முதலில் இருந்த படியே இருக்கட்டும். அதுதான் நன்றாக இருக்கும் என்று கூறி விட்டாராம், நயன்தாரா.
விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தில் வேல ராமமூர்த்தி, ஈ.ராமதாஸ், சுனுலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தில், திகிலான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சண்டை காட்சிகளை பீட்டர் ஹெய்ன் வடிவமைத்து இருக்கிறார்.