புதுச்சேரி

என்.சி.சி. பயிற்சி முகாம்

காரைக்கால் என்.ஐ.டி. வளாகத்தில் என்.சி.சி.பயிற்சி முகாம் தொடங்கியது.

தினத்தந்தி

காரைக்கால

காரைக்காலை அடுத்த திருவேட்டக்குடியில் இயங்கி வரும் என்.ஐ.டி. வளாகத்தில் மாவட்ட என்.சி.சி. யூனிட் சார்பில், வருடாந்திர பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. முகாமை கமாண்டர் லலித் குமார் ஜோஷி தொடங்கி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் 250 பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும் ஒரு முதுநிலை என்.சி.சி. அதிகாரி, ஒரு பெண் பயிற்றுனர் உள்பட 6 ராணுவ பயிற்றுனர்கள் மற்றும் 4 என்.சி.சி. அதிகாரிகள் இந்த முகாமை வழிநடத்துகின்றனர்.

இந்த பயிற்சி முகாமில் ராணுவம் சம்பந்தப்பட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, துப்பாக்கிகளை கையாளுதல், துப்பாக்கிச் சுடுதல், நில வரைபடங்கள், ராணுவ நடை பயிற்சி, ராணுவ கட்டளைகள் போன்ற முக்கியமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும், பொது அறிவு வகுப்புகள், சுய சுத்தம் மற்றும் ஒழுக்கம், சாலை விழிப்புணர்வு, சமூக சேவை மற்றும் பங்களிப்பு, கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை