மாவட்ட செய்திகள்

திருக்கோவிலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு

திருக்கோவிலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி மகள் விருத்தாம்பாள்(வயது 25). இவர் சம்பவத்தன்று அதே ஊரில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி அருகில் இருந்த தரை கிணற்றில் விழுந்தார். இதில் நீச்சல் தெரியாத விருத்தம்பாள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.