ஆட்டோமொபைல்

புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 டபிள்யூ 2 அறிமுகம்

தினத்தந்தி

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்.யு.வி. 300 மாடலில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைப் புகுத்தி எக்ஸ்.யு.வி. 300 டபிள்யூ 2 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.7.99 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. ஸ்போர்ட்ஸ் ரக எஸ்.யு.வி.யை விரும்புவோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் அனைத்து அம்சங்களும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக இந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் மிகுந்த செயல்திறன் கொண்ட 1.2 லிட்டர் எம் ஸ்டாலியோன் டி.ஜி.டி.ஐ. பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதை ஸ்டார்ட் செய்த 5 விநாடிகளில் 60 கி.மீ. வேகத்தைத் தொட்டு விட முடியும். அதிவேகத்தை எட்டுவதற்கு வசதியாக இது 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என்ஜினைக் கொண்டுள்ளது. பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.9.29 லட்சம். இந்த மாடலில் திறந்து மூடும் மேற்கூரை வசதியும் உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்