சினிமா துளிகள்

ராதே ஷ்யாம் படக்குழுவினரின் புதிய அப்டேட்

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராதே ஷ்யாம் படக்குழுவினர் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.

பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

ராதே ஷ்யாம் படத்தின் டீசர் அக்டோபர் 23-ந் தேதி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளன்று காலை வெளியானது. இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் புதிய டிரைலரை மார்ச் 2ஆம் தேதி மதியம் 3 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ராதே ஷ்யாம் திரைப்படம் மார்ச் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்