வில்னியஸ்
லிதுவேனியாவில் டாக்டர்கள் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு எக்ஸ்ரே எடுத்தனர். அப்போது அவரது வயிற்றில் கிட்டத்தட்ட 1 கிலோ அளவிற்கு உலோகப் பொருட்கள் மற்றும் நகத்துண்டுகள் இருப்பதைக் கண்டறிந்தனர். அதன்பின்பு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை டாக்டர்கள் வெளியேற்றினர்.
டாக்டர்கள் எடுத்த சில உலோகத் துண்டுகள் 10 சென்டிமீட்டர் வரை அளவுள்ளதாக இருந்தது. மனிதர்களின் உடலுக்குள் உலோகப் பொருட்கள் கண்டெடுக்கப்படுவது ஒன்றும் புதிது இல்லை. என்றாலும், இவ்வளவு பெரிய அளவுள்ள உலோகங்களை கண்டெடுப்பது இதுவே முதல் முறை.
உலோகத் துண்டுகள் அவருடைய வயிற்றின் உள் சுவர்களை சேதப்படுத்தி உள்ளன. மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அனைத்து உலோகத் துண்டுகளும் அகற்றப்பட்டன. அந்த நபர் இப்போது நலமாக இருப்பதாகவும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு அவருக்கு சில உளவியல் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் கூறினர்.