செய்திகள்

115–வது பிறந்தநாள் விழா: காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 115–வது பிறந்தநாளை யொட்டி நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நெல்லை,

பெருந்தலைவர் காமராஜரின் 115வது பிறந்தநாளை யொட்டி நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பெருந்தலைவர் காமராஜரின் 115வது பிறந்தநாள் விழாவையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன் உள்ள காமராஜர் சிலை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்பு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் காமராஜர் பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்கள்.

அ.தி.மு.க.(அம்மா கட்சி) நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர்முத்தையா, புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. ஆகியோர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் விஜிலாசத்யானந்த் எம்.பி., முன்னாள் மண்டல தலைவர்கள் எம்.சி.ராஜன், தச்சை மாதவன், மோகன், நெல்லை மாநகர் மாவட்ட அவைதலைவர் பரணிசங்கரலிங்கம், பொருளாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், சிறுபான்மைபிரிவு செயலாளர் கபிரியேல் ஜெபராஜ், சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, பால்கண்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியினர் நெல்லை சந்திப்பில் இருந்து மேளதாளம் முழங்கவும், பட்டாசு வெடித்தும் ஊர்வலமாக வந்து வக்கீல் அணி துணைத்தலைவர் ஜெனி தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முன்னாள் கவுன்சிலர்கள் ஆறுமுகம், குறிச்சிசேகர், பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நெல்லை மாநகர செயலாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. நிர்வாக குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட பிரதிநிதி சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரசார் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். காமராஜர் சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, பொதுச்செயலாளர் வானமாமலை, இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் காமராஜ், அப்துல்காதர், சிறுபான்மை பிரிவு தலைவர் அந்தோணி செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரசார் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாநில செயலாளர் ஏ.பி.சரவணன், நிர்வாகிகள் சண்முகராஜா, சக்சஸ் புன்னகை, ஜான்சிராணி, கோமதிசண்முகம் உள்பட பலர் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அன்னதானம் வழங்கினார்கள்.

பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுரேஷ், பாலாஜி கிருஷ்ணசாமி, மாநில துணைதலைவர் குருசாமி, மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சியினர் மாநில துணைபொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட செயலாளர் அரிகரன், இளைஞர் அணி செயலாளர் இசக்கிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க.வினர் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நெல்லை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் முகமது அலி தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் இளைஞர் அணி செயலாளர் பழனிகுமார், துணை செயலாளர் ஆனந்தமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் சேவியர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சமத்துவ மக்கள் கழகத்தினர் மாவட்ட செயலாளர் அந்தோணிதாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நெல்லை மாவட்ட மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் மங்களா ஜவகர்லால் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

சிவசேனா கட்சியினர் மும்பை தாராவி செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில், நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் ரவிதேவேந்திரன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். இதில் செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் கண்மணிமாவீரன், மாவட்ட தலைவர் பொட்டல் கண்ணன், பொருளாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சியினர் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மகளிர் அணி செயலாளர் குயிலிநாச்சியார் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தட்சணமாற நாடார் சங்க தலைவர் டி.ஆர்.சபாபதி நாடார் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிர்வாக சபை உறுப்பினர்கள் காமராஜ், கண்மணி, குணசேகரன், சப்கமிட்டி உறுப்பினர்கள் ஸ்ரீதர்ராஜன், மனேக்பால் தங்கநேசன், சங்க மேலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை நாடார் உறவின் முறை சங்க தலைவர் எஸ்.எஸ்.எஸ்.நாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. செயலாளர் முருகேசன், பொருளாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் தனசேகர பாண்டியன், பாக்கியராஜ், ராமலிங்கம், மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூர் நாடார் மகாஜனசங்க நிர்வாகி மகாகிப்ட்சன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் தனது கட்சி நிர்வாகிகளுடன் வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நெல்லை மாநகர செயலாளர் ஏ.எஸ்.மணியன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு அன்னதானம் நடந்தது. அன்னதானத்தை முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா தொடங்கிவைத்தார். இதில் தாராபுரம் மன்ற நிர்வாகிகள், சிந்துபூந்துறை மன்ற நிர்வாகிகள், ராஜபதி, கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தினர் மானூர் ஒன்றிய தலைவர் செல்வராஜ், சங்கர்நகர் தலைவர் ராபர்ட் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை நாடார் தெரு, வண்ணார்பேட்டை, கருப்பந்துறை, டவுன் சாலியர் தெரு, மேட்டுத்தெரு, தச்சநல்லூர், ராமையன்பட்டி, மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த நாடார் சமுதாய இளைஞர்கள் வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.