செய்திகள்

அறந்தாங்கி நகராட்சி பகுதியில் 19 மின்மோட்டார்கள் பறிமுதல்

அறந்தாங்கி நகராட்சி பகுதியில் 19 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி பகுதியில் குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளி வந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையர் வினோத் உத்தரவு படி நேற்று நகராட்சி பகுதியில் 4 குழுவினராக பிரிக்கப்பட்டு 10, 11, 12, 13 ஆகிய வார்டில் காலை 5 மணிக்கு நகராட்சி பொறியாளர் மீராஅலி தலைமையில், பிட்டர் கார்த்திகேயன், மின் பணியாளர்கள் ராதா, செல்லமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது குடிநீர் குழாயில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்த வீடுகளில் இருந்து 19 மின்மோட்டார்களை நகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர். குடிநீர் குழாய் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பதை தடுக்க அறந்தாங்கி நகராட்சி பகுதி முழுவதும் வீடு வீடாக ஆய்வு செய்யப்படும். இதே நிலை தொடர்ந்தால் நகராட்சி மூலம் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கப் படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அறந்தாங்கி நகராட்சியில் ஆடு இறைச்சி சுத்தம் செய்யும் கூடத்தில், ஆடு வெட்டி சுத்தம் செய்யாமல் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி சுகாதார ஆய்வாளர் சேகருக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர் அங்கு ஆய்வு செய்தார். அப்போது சாகுல் ஹமீது என்பவர் ஆடுகளை வெட்டி சுத்தம் செய்யாமல் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிட மிருந்து இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவருக்கு எச்சரிக்கை செய்து, அவரிடமிருந்து ரூ.ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்