செய்திகள்

கலை கல்லூரிகளில் சேர 2 லட்சம் பேர் விண்ணப்பம்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

1-ந்தேதி முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், கலை கல்லூரிகளில் சேர 2 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டு, கடந்த 20-ந்தேதி முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்தநிலையில் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கைகள் வைத்ததை தொடர்ந்து, அதனை உயர்கல்வித்துறை மாற்றி அமைத்து இருக்கிறது.

அதுதொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 20-ந்தேதி தொடங்கியது. தற்போது வரை (நேற்று) 2 லட்சத்து 9 ஆயிரத்து 237 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர். விண்ணப்பப்பதிவு செய்ய ஜூலை 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் பட்டியல்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் அந்த சான்றிதழை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளனர். எனவே மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, ஏற்கனவே ஜூலை 25-ந்தேதி முதல் ஆகஸ்டு 5-ந்தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என இருந்ததை, ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என மாற்றப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து