செய்திகள்

300 அடி பள்ளத்தில் வீசி 2 குழந்தைகள் கொலை - குடும்பத்தகராறில் தந்தை வெறிச்செயல்

குடும்ப தகராறில் 300 அடி பள்ளத்தில் 2 குழந்தைகளை வீசி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டூர்நாடு அரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 28). இவரது மனைவி பாக்கியம் (24). இவர்களுக்கு கிரிதாஸ் (8) என்ற மகனும், கவிதர்ஷினி (5) என்ற மகளும் இருந்தனர். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இதில் மனமுடைந்த பாக்கியம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து அரியூர்நாடு கவரப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு 2 குழந்தைகளுடன் சென்றார்.

பின்னர் குழந்தைகள் இருவரும் கவரப்பட்டி அருகே தெம்பளம் ஊராட்சியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி கவரப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற சிரஞ்சீவி, அவர்களிடம் சமாதானம் பேசி குழந்தைகளை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார். மேலும், மனைவி பாக்கியத்தையும் சமாதானம் செய்து அனுப்பும் படியும் கூறி உள்ளார். இதையடுத்து குழந்தைகள் 2 பேரையும் சிரஞ்சீவியுடன் பாக்கியத்தின் பெற்றோர் அனுப்பி வைத்தனர்.

இதன்பின்னர் குழந்தைகளை சிரஞ்சீவி பள்ளிக்கு அனுப்பாமல் இருந்து உள்ளார். இதுபற்றி கேட்டறிய சிரஞ்சீவியை தொடர்பு கொண்டபோதும் அவருடன் பேச முடியவில்லை. இதில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...