செய்திகள்

மும்பையில் கொரோனா பாதிப்புக்கு 39 பேர் பலி

மராட்டியத்தின் மும்பை நகரில் கொரோனா பாதிப்புக்கு இன்று 39 பேர் பலியாகி உள்ளனர்.

மும்பை,

இந்தியாவில் இன்று வரை 6.97 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. 19,701 பேர் பலியாகி உள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடமும், தமிழகம், டெல்லி, குஜராத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

மராட்டியத்தில் மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரங்களில் பாதிப்பு எண்ணிக்கையானது அதிக அளவில் உள்ளது. மும்பையில் 1,201 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85,326 ஆக உயர்ந்து உள்ளது.

மும்பையில் இன்று ஒரே நாளில் 39 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4,935 ஆக உயர்ந்து உள்ளது. சிகிச்சை பெற்று வருகின்றவர்களில் 1,269 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 57,152 ஆக உயர்ந்து உள்ளது. 23,239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை