செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று புதிதாக 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமாகி வருகிறது. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,500-ஐ தாண்டிய நிலையில், கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது. நேற்றும் பாதிப்பு எண்ணிக்கை 4,280 ஆக அதிகரித்தது. இதனால் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 1,07,001 ஆக உயர்ந்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று நான்காவது நாளாக மேலும் 4,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 1,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்றில் இருந்து 2,186 பேர் இன்று குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை