செய்திகள்

4-ம் ஆண்டு மருத்துவ மாணவர்களை கொரோனா சிகிச்சை அளிக்க தயார்படுத்த வேண்டும் - சரத்குமார் வேண்டுகோள்

4-ம் ஆண்டு மருத்துவ மாணவர்களை கொரோனா சிகிச்சை அளிக்க தயார்படுத்த வேண்டும் என்று சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் மருத்துவமனைகளில் உள்ள 18 லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவாசக்கருவிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை அதிகரித்து கொரோனாவை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தால், தற்போது உள்ள மருத்துவர்களை விட அதிகமான மருத்துவர்கள் தேவைப்படுவார்கள். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4-ம் ஆண்டு மருத்துவ கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களை தயார் நிலையில் இருக்க அரசு அறிவுறுத்தலாம்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தேர்தல் காலத்தில் பொதுமக்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வீடுதோறும் பூத் சிலிப் வழங்குவதை போல, சுகாதாரத்துறை வழிகாட்டுதலோடு, பூத் அட்டவணைப்படி, சிறப்பு குழு அமைத்து 4 மாவட்டங்களில் வீடுதோறும் கொரோனா பரிசோதனைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு