செய்திகள்

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சுவர் இடிந்ததில் 5 பேர் பலி

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தின் வளாக சுவர் இடிந்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

பெஷாவர்,

பாகிஸ்தான் நாட்டில் இன்று 73வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதில் கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் அமைந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் அந்நாட்டு ராணுவ கண்காணிப்பின் கீழ் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

இதில் திடீரென வளாக சுவர் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். 18 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் கில்ஜித் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்