செய்திகள்

கார்த்திகை பூர்ணிமா கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கி 6 பேர் பலி

கார்த்திகை பூர்ணிமா கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கி 6 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

பாட்னா,

வட மாநிலங்களில் கார்த்திகை பூர்ணிமா விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆறு, குளங்களில் மக்கள் புனித நீராடி மகிழ்ந்தனர். பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் செகோதேவரா கிராமத்தை சேர்ந்த 2 சிறுமிகள் அங்குள்ள குளத்தில் நீராடியபோது, ஆழமான பகுதிக்கு சென்றனர். அவர்களை காப்பாற்றுவதற்காக அரசு பள்ளி ஆசிரியரான அவினாஷ் குமார் என்பவர் குளத்தில் குதித்தார். சிறிது நேரத்தில் அடுத்தடுத்து அவர்கள் மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதேபோல் நாளந்தா மாவட்டம் கோஷ்ரவா கிராமத்தில் உள்ள சக்ரி ஆற்றில் நீராடிய 3 சிறுமிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு