கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் போலீசார் காவேரிப்பட்டணம் கோவிந்தசெட்டி தெரு, டேம்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மாதேஷ் (வயது 38), மகபூப்பாஷா (31), சிவா (22), சபரி (22), திருப்பதி (41), முத்து திருப்பதி (34) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரத்து 200-ம், 20 லாட்டரி சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராகவன் மற்றும் போலீசார் கெலமங்கலம் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த மதனகிரி (52), கணேசா காலனியை சேர்ந்த முனிராஜ் (31), பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணப்பா (60) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 61 லாட்டரி சீட்டுகளும், ரூ.500-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்டத்தில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ. 21 ஆயிரத்து 720, 81 லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.