செய்திகள்

நடிகர் ரஜினியுடன் இஸ்லாமிய மதகுருக்கள் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்துடன், இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்து பேசினர்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி வன்முறை குறித்து தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். டெல்லி வன்முறை உளவுத்துறையின் தோல்வி, கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டுச் செல்லுங்கள் என ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

இதுதவிர சிஏஏ குறித்தும் என்பிஆர், என்ஆர்சி குறித்தும் தங்களுக்கு புரிதல் வேண்டும் என எழுதிய இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களை அழைத்து நாம் நேரில் பேசுவோம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டன் இல்லத்தில் ஹஜ் அசோசியேஷன் தலைவர் முகமது அபூபக்கர் நேற்று சந்தித்து பேசினார்.

இந்நிலையில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையை சேர்ந்த மதகுருக்கள் சென்னை பேயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில், ஆலேசனையில் பங்கேற்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம் தெடர்பாக ரஜினிகாந்துடன் அவர்கள் ஆலேசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு, வருத்தம் தெரிவித்து அறிக்கை அனுப்பியிருந்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது.