செய்திகள்

மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி 7-ந் தேதி நடக்கிறது

மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

தினத்தந்தி

பெரம்பலூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட அளவிலான ஆண்களுக்கான ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் டாக்டர் எம்.ஜிஆர். விளையாட்டு வளாகத்தில் வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் வளைகோல் பந்து மன்றங்களில் உள்ள அணியினர் 7-ந் தேதி காலை 8.30 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

6 மாவட்டங்களுக்கு...

ஆக்கி போட்டிகள் தொடர் போட்டி முறையில் நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகளுக்கு சான்றிதழ்களும், பரிசும் வழங்கப் படும். இதில் அதிக புள்ளிகள் எடுத்து வெற்றிபெறும் அணிகளுக்கு மண்டல அளவில் திருச்சியில் நடைபெறும் 6 மாவட்டங்களுக்கு இடையேயான (திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர்) போட்டியில் கலந்து கொள்ளலாம்.

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். எனவே அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் வளைகோல் பந்து மன்றங்களில் உள்ள வளைகோல் பந்து அணியினர் போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்