செய்திகள்

பட்டுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பட்டுக்கோட்டை அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி இறந்தார்.

தினத்தந்தி

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நயினாங்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா(வயது50). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை வயலுக்கு சென்றார். அப்போது வயலில் ஒரு மின்கம்பி அறுந்து கிடந்தது. இதை கவனிக்காமல் கருப்பையா மின்கம்பியை மிதித்து விட்டார். இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கருப்பையா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பரிதாப சாவு

இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் இறந்த சம்பவம் நயினாங்குளம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மின்சாரம் தாக்கி உயிரிழந்த கருப்பையாவுக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு