செய்திகள்

சென்னை வாலாஜா சாலையில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

சென்னை வாலாஜா சாலையில் மொபட் மீது லாரி மோதியதில், லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜீனத் (வயது 23). இவர், நேற்றுமுன்தினம் இரவு வாலாஜா சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். ஓமந்தூரார் ஆஸ்பத்திரி அருகே வந்தபோது, பின்னால் வேகமாக வந்த லாரி, இவரது மொபட் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த முகமது ஜீனத் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய முகமது ஜீனத், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான முகமது ஜீனத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தண்ணீர் வினியோகம் செய்யும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி வளாகத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் நசுங்கி இறந்து கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார், பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் படுத்து கிடந்த அவர் மீது தண்ணீர் ஏற்ற வந்த லாரி சக்கரம் ஏறி இறங்கியதால் அவர் உடல் நசுங்கி இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

பலியான அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் மீது மோதிய தண்ணீர் லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்