கீழக்கரை,
கீழக்கரை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பழைய பென்சனை அமல்படுத்த கோரியும் கொரோனா காலங்களில் 24 மணி நேரமும் பணிபுரிந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தலைமை செயலக அலுவலர்களுக்கு இணையாக மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கக்கோரியும் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதிய உணவு இடை வேளையில் கீழக்கரை வருவாய் துறை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார் தலைமையில் கீழக்கரை தாசில்தார் முருகேசன், தனிதாசில்தார் சீனிவாசன், துணை தாசில்தார் மீனாட்சிசுந்தரம், மாவட்ட இணை செயலாளர் காசி விஸ்வநாததுரை, வட்ட கிளை தலைவர் சரவணன் உள்பட கீழக்கரை வருவாய் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.