செய்திகள்

உடல் நலம் பாதிப்பு குறித்து நடிகை ஹேமமாலினி மறுப்பு

உடல் நலம் பாதிப்பு குறித்து வெளியான தகவலுக்கு நடிகை ஹேமமாலினி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

இந்தி நடிகை ஹேமமாலினி(வயது71) தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக உள்ளார். இந்தநிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த தகவலை நடிகை ஹேமமாலினி மறுத்து டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கிருஷ்ணரின் அருளால் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

இதேபோல நடிகை ஹேமமாலினி நலமாக இருப்பதாக அவரது மகள் ஈஷா தியோலும் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இதுகுறித்து அவர், எனது தாய் ஆரோக்கியமாகவும், நலமாகவும் உள்ளார். அவரது உடல்நலம் குறித்து வெளியான தகவல் போலியானது. அதுபோன்ற வதந்திகளுக்கு யாரும் எதிர்வினையாற்ற வேண்டாம். எல்லோரின் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி என கூறியுள்ளார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்