செய்திகள்

வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும் தி.மு.க. கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும் என தி.மு.க. கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினத்தந்தி

திருவாரூர்,

திருவாரூர் நகர கட்சி அலுவலகத்தில் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சோம சுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கலைவாணன், மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஆடலரசன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கவனமாக பணியாற்ற

கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களாக உள்ள தி.மு.க. வினர் அனைவரும் மிகவும் கவனமாக பணியாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் தேவா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்