செய்திகள்

அக்‌ஷய்குமார் நடிப்பில் ‘டிரைவிங் லைசன்ஸ்’

மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கடைசியில் வெளியான படம் ‘டிரைவிங் லைசன்ஸ்.’ ஒரு நடிகருக்கும், அவரது தீவிரமான ரசிகராக இருக்கும் மோட்டார் வாகன ஆய்வாளருக்கும் இடையே ஒரு கட்டத்தில் ஏற்படும் ஈகோ பிரச்சினையால் உருவாகும் சிக்கல்களை இந்தப் படம் சொல்லியது.

தினத்தந்தி

இதில் நடிகராக பிருத்விராஜூம், மோட்டார் வாகன ஆய்வாளராக சுராஜ் வெஞ்சாரமூடுவும் நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ரூ.4 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம், பாக்ஸ் ஆபீசில் ரூ.25 கோடியை வசூல் செய்தது. எந்த மொழிக்கும் ஏதுவாக அமைந்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தை, பாலிவுட்டில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

இதில் பிருத்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய்குமாரும், சுராஜ் வெஞ்சாரமூடு நடித்த கதாபாத்திரத்தில் இம்ரான் ஹாஷ்மியும் நடிக்க இருக்கிறார்கள். பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் திரைக்கதையில் சிறிய மாற்றம் செய்யப்பட இருக்கிறதாம்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து