செய்திகள்

அனைத்து சமூகமும் அமைதியாக வாழ வழி ஏற்படுத்த வேண்டும் டாக்டர் ராமதாசுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

பதற்றமான சூழ்நிலை உருவாக இடம் அளிக்காமல், அனைத்து சமூகமும் அமைதியாக வாழ வழி ஏற்படுத்த வேண்டும் என டாக்டர் ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொன்பரப்பி வன்முறையை கண்டித்து கடந்த 24-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் விதத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பேசாத ஒன்றை பேசியதாக இட்டுக்கட்டி ஓர் அறிக்கை வெளியிட்டு பதற்றச் சூழ்நிலையை உருவாக்கி இருப்பதற்கு வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடி வரும் கட்சி இந்திய கம்யூனிஸ்டு கட்சி. சமூக நீதிப் போராளி பேராயர் எஸ்றா சற்குணம் தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவர். சமூக நல்லிணக்கத்திற்காக உழைக்கும் இவர்கள் மீது கூட, டாக்டர் ராமதாசுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது மிகுந்த வேதனை அளிக்கிறது. யார் மீதுதான் அவருக்கு நம்பிக்கை என்ற கேள்வியும் எழுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்