உடனடியாக அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களும், அக்கம் பக்கத்தினரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராயபுரம், தண்டையார்பேட்டை, பாரிமுனை ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு உடை அணிந்து ஐஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவை சரிசெய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.