செய்திகள்

தர்மபுரியில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

தர்மபுரியில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தினத்தந்தி

தர்மபுரி,

தமிழக முன்னாள் முதல்அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாள் நேற்று தர்மபுரியில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி பெரியார் சிலையில் இருந்து மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று தர்மபுரி 4 ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமி, முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நகர செயலாளர் குருநாதன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, முன்னாள் நகர துணை செயலாளர் பூக்கடை ரவி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன், மாவட்ட நிர்வாகிகள் சுமதி, மோகன், தகடூர் விஜயன், கூட்டுறவு பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சின்.அருள்சாமி, நிர்வாகிகள் தீர்த்தலிங்கம், பலராமன், அறிவாளி, வடிவேல் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா நினைவுநாளையொட்டி தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று 4ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இதில் நகர செயலாளர் தங்கராஜ், மாவட்ட அவைத்தலைவர் மாதையன், மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன், முன்னாள் எம்.பி.தாமரைச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், முன்னாள் நகராட்சி தலைவர் சிட்டிமுருகேசன், வக்கீல் அணி நிர்வாகி ஆ.மணி, சார்பு அமைப்பு நிர்வாகிகள் தங்கமணி, சந்திரமோகன், முல்லைவேந்தன், பொன் மகேஸ்வரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஸ்டான்லி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தர்மபுரி பெரியார் சிலையில் இருந்து மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் ஆர்.ஆர்.முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று 4ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். மாநில நிர்வாகிகள் பாலு, அசோக்குமார், நகர செயலாளர் மணிவண்ணன், மாவட்ட துணைசெயலாளர் ஏகநாதன், ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், பெரியசாமி, நகர பேரவை செயலாளர் பெருமாள், பேரவை மாவட்ட செயலாளர் தென்னரசு உள்பட அணியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதே போன்று தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் இளமாதன் தலைமையிலும், ம.தி.மு.க. சார்பில் மாவட்ட துணை செயலாளர் சிவலிங்கம், நகர செயலாளர் வஜ்ஜிரவேல் ஆகியோரது தலைமையிலும் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதே போல் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்