சண்டிகார்,
மறைந்த முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன் ஓம்பிரகாஷ் சவுதாலா அரியானா மாநிலத்தில் முன்பு முதல்-மந்திரியாக இருந்தார். அவரது மகன்கள் அஜய் சவுதாலா, அபய் சவுதாலா இந்திய தேசிய லோக் தளம் கட்சியை நடத்திவருகிறார்கள். 4-ம் தலைமுறையினராக அஜய் சவுதாலாவின் மகன்கள் துஷ்யந்த் சவுதாலா, திக்விஜய் சவுதாலா ஆகியோர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.
இப்போது சவுதாலா குடும்பத்தின் மற்றொரு வாரிசும், அபய் சவுதாலாவின் மகனுமான அர்ஜூன் சவுதாலாவும் தேர்தல் களத்தில் குதிக்கிறார். 26 வயதாகும் அவர் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கூறும்போது, கட்சி என் தோள் மீது மிகப்பெரிய பொறுப்பை சுமத்தியுள்ளது. கட்சியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பாடுபட முயற்சி மேற்கொள்வேன் என்று கூறியுள்ளார்.