* அமெரிக்காவும் அதை உறுதி செய்துள்ளது. எனினும், மொசூல் நகரின் பல பகுதிகள் தொடர்ந்து தங்கள் வசம் இருப்பதாக கூறும் பயங்கரவாதிகள் உயிர் பிரியும் வரை போரிடுவோம் என்று தெரிவித்து உள்ளனர்.
* அமெரிக்காவின் பிரபல டி.வி. நடிகர் எல்சன் நெல்லிஸ் 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஒளிபரப்பான டூரு பிளட் என்னும் டி.வி. தொடர் மூலம் புகழ் பெற்றவர். இவர் கடந்த சில நாட்களாக இருதய நோயால் அவதிப்பட்டு லாஸ்ஏஞ்சல்ஸ் நகர ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு எல்சன் நெல்லிஸ் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 39.
* ஆப்பிரிக்க நாடான கானா தனது நாட்டின் கானாசாட்-1 என்ற முதல் செயற்கைகோளை நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தியது. இது வெற்றிகரமாக பூமியைச் சுற்றி வருகிறது. ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்தின் உதவியை பெற்று கானா நாட்டின் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்த செயற்கைகோளை தயாரித்தனர். இதன் மதிப்பு, 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.33 லட்சம்) ஆகும்.
* வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான (ஜஸ்டிஸ் கட்சி) 46 வயது லியோபோல்டோ லோபஸ் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு ராணுவ சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நலம் கருதி லோபசை விடுதலை செய்து வீட்டுக் காவலில் வைக்கும்படி அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு காரகாஸ் நகரில் உள்ள அவருடைய வீட்டில் காவலில் வைக்கப்பட்டார். அப்போது தனது வீட்டுச்சுவரின் மீது ஏறி நின்று பேசிய அவர் கட்சி தொண்டர்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடும்படி கேட்டுக் கொண்டு இருக்கிறார்.