செய்திகள்

நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைதானவர்: குண்டர் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு

வழிப்பறி மற்றும் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு உள்ளிட்ட பல வழக்கில் ரகுமான் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினத்தந்தி

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (வயது 24). இவர் மீது கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் கொலை, வழிப்பறி மற்றும் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரகுமான் ஒரு வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரகுமானை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் ஜான் லூயிஸ், ஏற்கனவே சிறையில் உள்ள ரகுமானை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் கலெக்டரின் உத்தரவு நகலை புழல் சிறைத்துறை அதிகாரியிடம் வழங்கினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை