செய்திகள்

கேரளாவில் 2 செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

கேரளாவில் 2 செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 25 ஆம் தேதி நடந்த வன்முறை தொடர்பான செய்திகளை, ஒரு சார்பாக ஒளிபரப்பியதாக கேரளாவைச்சேர்ந்த மலையாள செய்தி தொலைக்காட்சிகளான ஏசியா நெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் சேனல்களுக்கு 48 மணி நேரம் மத்திய அரசு தடை விதித்தது.

வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணியிலிருந்து 48 மணி நேரத்திற்கு தடை விதிப்பதாக தகவல் ஒலிபரப்புத்துறை தெரிவித்து இருந்தது.

செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்ட தடை, கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், 2 செய்தி தொலைக்காட்சிகளும் மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன. இதன் மூலம், இரண்டு சேனல்களுக்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக தெரிகிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை