செய்திகள்

சட்டசபை வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதியாக ‘சாய்தள லிப்ட்’

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக ‘சாய்தள லிப்ட்’ அமைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுவை அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் உள்ள 25 அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி படிக்கட்டுகளில் ஏறாமல் செல்வதற்கு வசதியாக சாய்தள லிப்ட் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்து தர மத்திய அரசு நிதி உதவி வழங்கியுள்ளது.

முதல் கட்டமாக புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் மற்றும் சபாநாயகர் அறையின் அருகில் உள்ள படிக்கட்டில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதியாக ரூ.1லட்சத்து 95 ஆயிரம் செலவில் மின்சாரத்தால் இயங்கும் சாய்தள லிப்ட் பொருத்தப்பட்டுள்ளது.

சட்டசபை வளாகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் முதல்-அமைச்சர், சபாநாயகரை சந்திக்க விரும்பினால் அவர்கள் படிக்கட்டில் ஏறி செல்லாமல் அதன் அருகில் பொருத்தப்பட்டுள்ள சாய்தள லிப்டில் ஏறி அதில் உள்ள இருக்கையில் அமர்ந்து அதற்கான சுவிட்சை இயக்கினால் போதும். மேல்தளத்திற்கு போய் இறங்கி விடலாம்.

இதேபோல் மேல்தளத்தில் இருந்து கீழ்தளத்துக்கு வருவதற்கும் இந்த சாய்தள லிப்டை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தலாம். இதுதவிர மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு கழிவறையும் சட்டசபை வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை