செய்திகள்

அரசு தாய்-சேய் நல ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்தது நர்சு பிரசவம் பார்த்ததே காரணம் என உறவினர்கள் முற்றுகை

அரசு தாய்-சேய் நல ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்தது. நர்சு பிரசவம் பார்த்ததே இதற்கு காரணம் என்று கூறி ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி, கண்டோன்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி. இவருடைய மனைவி நஸ்ரின். கர்ப்பிணியான நஸ்ரீனுக்கு நேற்று மதியம் பிரசவ வலி ஏற்பட்டதால் பூந்தமல்லியில் உள்ள அரசு தாய்-சேய் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது பிரசவம் பார்க்கும் டாக்டர் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது.

அங்கிருந்த நர்சு ஒருவர், நஸ்ரினுக்கு பிரசவம் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று இரவு நஸ்ரினுக்கு இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் நஸ்ரினின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டாக்டர்கள் இல்லாமல் நர்ஸ் பிரசவம் பார்த்ததே குழந்தை இறந்ததற்கு காரணம் என்று கூறி அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் நஸ்ரினுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போலீசார், ஆஸ்பத்திரியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதுபற்றி தமீம் அன்சாரி கொடுத்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார், இறந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்