செய்திகள்

தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி செக்காரக்குடி பகுதியில் இன்று கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கழிவுகளை அகற்றிக்கொண்டிருந்தபோது தொட்டிக்குள் இருந்து விஷ வாயு வெளிப்பட்டது. இதனை சுவாசித்த தொழிலாளர்கள் 4 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. உயிரிழந்த 4 பேரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்