செய்திகள்

பிஇ/ பிடெக் இரண்டாமாண்டு நேரடி மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாகவே நடைபெறும்: உயர்கல்வித்துறை அமைச்சர்

பிஇ/ பிடெக் இரண்டாமாண்டு நேரடி மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாகவே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பிஇ/ பிடெக் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கை இணையதளம் மூலமாகவே நடைபெறும். பி இ/ பிடெக் பகுதி நேர படிப்பு மற்றும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ போன்ற படிப்புகளுக்கும் இணையம் மூலமாகவே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று என உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நடப்பாண்டு பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில் 55,995 மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவித்த கேபி அன்பழகன் இணையதள விண்ணப்பப் பதிவு ஆக. 16ஆம் தேதி நடைபெறும். இணையதள பதிவு முடிந்தவுடன் ரேண்டம் எண் வெளியிட்டு சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடைபெறும்.ரேண்டம் எண் மாணவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பபடும் என்றார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை