செய்திகள்

20 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற சாத்தியமில்லை : மந்திரி எம்.பி.பட்டீல் சொல்கிறார்

நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற சாத்தியமில்லை என மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

தினத்தந்தி

பெங்களூரு,

விஜயாப்புராவில் நேற்று போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது;-

நாடாளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றதை தொடர்ந்து கருத்து கணிப்பு முடிவுகளை பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. கருத்து கணிப்பு முடிவுகள் நம்பும்படியாக இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 200 முதல் 225 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு கருத்து கணிப்பு முடிவுகள் பொய்யாகும். கருத்து கணிப்பு முடிவுகள் எப்போதும் உண்மையாக இருந்ததில்லை. 23-ந் தேதி கருத்து கணிப்புகள் உண்மையா, இல்லையா என்பது தெரிந்து விடும்.

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பை அனைத்து கட்சிகளும் தலை வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். கருத்து கணிப்பு முடிவுகள் படியே மக்கள் தீர்ப்பு இருந்தாலும், அதனையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். கருத்து கணிப்பு முடிவுகளின்படி நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 20 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற முடியாது. அது சாத்தியமில்லை. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சிகள் 18 முதல் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்