செய்திகள்

“ஜனநாயகத்துக்கு கருப்பு நாள்” - காங்கிரஸ் வர்ணனை

ஒப்புகை சீட்டுகளை எண்ணுவது தொடர்பான விவகாரத்தில், இது ஜனநாயகத்துக்கு கருப்பு நாள் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஒப்புகை சீட்டுகளை எண்ணுவது தொடர்பான எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்ததை ஜனநாயகத்துக்கு கருப்பு நாள் என்று காங்கிரஸ் கட்சி வர்ணித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது:-

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரிப்பதற்கு தேர்தல் கமிஷன் காரணம் சொல்லி இருக்க வேண்டும். ஆனால், காரணம் சொல்லாததால், தனது நம்பகத்தன்மையை கேள்வி கேட்பதற்கான களத்தை தேர்தல் கமிஷன் தயார் செய்து விட்டதாகவே அர்த்தம். முதலிலேயே எண்ணுவதற்கு தேர்தல் கமிஷன் விதி 56டி குறுக்கே வராது. அப்படி இருந்தும், தேர்தல் கமிஷன் ஏன் செய்ய மறுக்கிறது? தேர்தல் கமிஷன் நிராகரித்த செயல், ஜனநாயகத்துக்கு கருப்பு நாள் ஆகும்.

75 சதவீத வாக்காளர்களின் பிரதிநிதிகளாக நாங்கள் விடுத்த கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பா.ஜனதாவுக்கான மின்னணு வெற்றி எந்திரங்களாக உருவாக்கி இருக்கிறதோ? இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு