செய்திகள்

விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் - 3-ந் தேதி தொடங்குகிறது

டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக விசைப்படகு மீனவர்கள் அறிவித்து உள்ளனர்.

தினத்தந்தி

சேதுபாவாசத்திரம்,

விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் பட்டுக் கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் வேணுகோபால், மாநில செயலாளர் தாஜுதீன், நிர்வாகிகள் தேவதாஸ், சிட்டிலிங்கம், அருளானந்தம், செல்லதுரை ஆகியோர் உள்பட 13 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

டீசல் விலையை குறைக்க வேண்டும். மீனவர்களின் படகுகளுக்கு உற்பத்தி விலைக்கே டீசல் வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்க வேண்டும். சிறைபிடிக்கப்பட்டு பழுதடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது. வருகிற 8-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலு வலகம் முன்பு போராட்டம் நடத்தி, அடையாள அட்டை மற்றும் படகு பதிவு புத்தகத்தை திரும்ப ஒப்படைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்