Breaking-News

டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு

பிரேமதாசா மைதானத்தில் ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

கொழும்பு,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 4 பிரிவுகளில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோத உள்ளன. இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:

இந்தியா: அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், குல்தீப், வருண் சக்ரவர்த்தி, பும்ரா

பாகிஸ்தான்: சையிம் அயுப், சாஹிப்சதா பர்ஹான், சல்மான் அஹா (கேப்டன்), பாபர் அசம், முகமது நவாஸ், சதாப் கான், பஹிம் அஷ்ரப், உஸ்மான் கான், ஷாகீன் அப்ரிடி, அபர் அகமது, உஸ்மான் தாரிக்