Breaking-News

மியான்மர் நிலநடுக்கம் - சுமார் 100 பேர் உயிரிழந்ததாக தகவல்

மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 100 பேர் உயிரிழந்ததாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரிக்டரில் 7.7 என்ற அதிகபட்ச அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பகல் 11.50க்கு 7.7 என பதிவானது. 12.40க்கு 8.4 ஆக பதிவானது. பிற்பகல் 1.30 மணிக்கு 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.