செய்திகள்

நாய் மீது மோதாமல் இருக்க திருப்பிய போது, மரத்தில் கார் மோதி விபத்து, கணவன்-மனைவி பரிதாப சாவு

நாய் மீது மோதாமல் இருக்க திருப்பிய போது மரத்தில் கார் மோதியதில் கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த வாலிபருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்துகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

தினத்தந்தி

துடியலூர்,

கோவை துடியலூர்அருகிலுள்ள தடாகம் சோமையனூர்வி.கே.வி.அவென்யூவை சேர்ந்தவர்வீரபத்திரன் (வயது 58). இவருடையமனைவி புஷ்பா(52). இவர்களுடைய மகன் பிரபாகரன் (35).

இந்தநிலையில்கவுண்டம்பாளையத்தில் உள்ள உறவினர்வீட்டுக்கு பிரபாகரன்தனதுபெற்றோரை காரில்அழைத்து சென்றார். சிறிது நேரம் கழித்து அவர்கள்சோமையனூருக்கு காரில்சென்று கொண்டு இருந்தனர்.காரை பிரபாகரன்ஓட்டினார்.

கோவை- ஆனைக்கட்டி ரோட்டில் கணுவாய் அருகே சென்றபோது அந்தவழியாக சென்றநாய் ஒன்று சாலையின் குறுக்கே வந்தது. இதையடுத்து நாய் மீது மோதாமல்இருக்க பிரபாகரன்திடீரென்று பிரேக் போட்டார். அப்போது கட்டுப்பாட்டை இழந்தகார் தாறுமாறாகசென்றுசாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் வீரபத்திரன் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாகஇறந்தார். புஷ்பா மற்றும் பிரபாகரன்ஆகியோர் காருக்குள்ரத்த வெள்ளத்தில்உயிருக்கு போராடினர். இதைத்தொடர்ந்து அந்தவழியாக சென்றவாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த 2 பேரையும்மீட்டு கோவைஅரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால்சிகிச்சை பலன்அளிக்காமல்புஷ்பா பரிதாபமாகஇறந்தார். படுகாயம் அடைந்த பிரபாகரனுக்கு டாக்டர்கள்தீவிர சிகிச்சைஅளித்து வருகிறார்கள்.

இந்த விபத்துகுறித்து தடாகம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரத்தில் கார்மோதி கணவன்-மனைவி இறந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை