செய்திகள்

பா.ஜ.க. நிர்வாகியை தாக்க முயன்ற வழக்கு; தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன்

பா.ஜ.க. நிர்வாகியை தாக்க முயன்ற வழக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு முஞாமீன் வழங்கிய ஐகோர்ட்டு நீதிபதிகள் புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

மதுரையை சேர்ந்த பா.ஜ.க., நிர்வாகி சங்கரபாண்டியன். இவர், தி.மு.க. குறித்து சமூக வலைதளங்களில் சில பதிவுகளை வெளியிட்டார். இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ. மூர்த்தி தன் ஆதரவாளர்களுடன், சங்கரபாண்டியன் வீட்டுக்கு சென்று அவரை திட்டியதாகவும், அவரை தாக்க முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து சங்கரபாண்டியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ. மூர்த்தி உள்பட பலர் மீது ஊமச்சிக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் எம்.எல்.ஏ. மூர்த்தி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார். அதில், அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று எம்.எல்.ஏ.வுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை