செய்திகள்

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அரியலூர்,

அரியலூரில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண் டாடப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், நகர தலைவர் பழனிசாமி மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

அரியலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் குமார் தலைமையில், கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பழனிசாமி மற்றும் அக்கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் வட்டார நாடார் மகாஜன சங்க தலைவர் அசோக்குமார் தலைமையில், ராஜபாண்டியன் மற்றும் சங்க உறுப்பினர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மாங்காயி பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

அரியலூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் நடராஜன் தலைமையில் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் நாம் தமிழர் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

செந்துறை, திருமானூர்

அரியலூர் மாவட்டம் செந்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அரியலூர் மாவட்ட தலைவர் கலந்துகொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட உயர்மட்ட குழு தலைவர் கொளஞ்சி நாதன் உள்பட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

திருமானூர் அருகே உள்ள வாரணவாசியில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வட்டார தலைவர் (மேற்கு) பாண்டியராஜன் தலைமை தாங்கி னார். மாவட்ட துணைத்தலைவர் பூண்டி சந்தானம், மாவட்ட பொதுச்செயலாளர் தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

பெரம்பலூரில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சின்னசாமி தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் மாவட்ட தலைவர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் புதிய பஸ்நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பெரம்பலூர் மாவட்ட நாடார் உறவின்முறை சங்க தலைவர் நடராஜன் தலைமையில் செயலாளர் தினகரன், பொருளாளர் பால்ராஜ் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு பொதுமக்களுக்கு இனிப்புகளை அரசியல் கட்சியினர் வழங்கி காமராஜரின் முன்னோடி திட்டங்களை நினைவு கூர்ந்தனர்.