செய்திகள்

பள்ளிப் பைகளின் எடையைக் குறைக்க புதிய திட்டம் - ஜாவடேகர்

மத்திய மனித வள மேம்பாடுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பள்ளிகளில் டிஜிட்டைஷேசன் நடைபெற்றால் பள்ளிப்பைகளின் கனம் குறையும் என்று கூறியுள்ளார்.

தினத்தந்தி

நீமுச் (ம.பி)

அடுத்த கல்வி ஆண்டிலிருந்து புதிய மென்பொருள் ஒன்றுடன் ஒரு திரையிடல் கருவி மற்றும் டிஜிட்டல் பலகை ஒன்றையும் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கும் திட்டம் அமலாகும்; இதன் மூலம் பள்ளி மாணவர்களின் புத்தகப்பைகளின் சுமையும் குறையும் என்றார்.

மத்திய பிரதேசத்தில் 20 ஹை-டெக் பள்ளிகளை திறந்து வைத்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

நாடு முழுதும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 15 லட்சம் பள்ளிகளில் 26 கோடி மாணவர்களுக்கு 70 லட்சம் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். இம்மாணவர்களில் 10 கோடி பேர் மதிய உணவு திட்டத்தில் இணைந்துள்ளனர் என்றார் அமைச்சர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்