செய்திகள்

அச்சமூட்டும் சூழ்நிலையை அரசு உருவாக்க முயல்கிறது - பிரகாஷ் அம்பேத்கர்

ஆளும் பாஜகவும், ஆர் எஸ் எஸ்சும் நாட்டில் அச்சமூட்டும் சூழ்நிலையை உருவாக்க முயல்வதாக அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் குற்றஞ்சாட்டினார்.

தினத்தந்தி

ஜலந்தர்

இந்த இயக்கங்கள் அவற்றின் கொள்கைகளை திணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர், முன்பு பண மதிப்பு நீக்கம், இப்போது சரக்கு மற்றும் சேவை வரி இவற்றின் மூலம் மத்திய அரசு தோல் மற்றும் ஜவுளித்துறைகளை அழிக்க முயல்கிறது என்றார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற சஹரான்பூர் கலவரம் தொடர்பாக பீம் ராணுவம் என்ற தலித் இயக்கத் தலைவரான சந்திரசேகரை கைது செய்துள்ளனர். உண்மையில் சந்திரசேகர் நீதியை எதிர்பார்க்கிறார். அரசு உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு அவர் மீது வழக்கு போட்டுள்ளது என்றார் பிரகாஷ்.

பிரகாஷ் அம்பேத்கரின் பேச்சுக்கு பதில் சொல்லிய பஞ்சாப் பாஜக செய்தித் தொடர்பாளர் அவர் இப்படி பேசுவதை விடுத்து அம்பேத்கரை படிக்க வேண்டும். அரசியலமைப்பை உருவாக்கியவரின் கருத்தியலையே பாஜக முன்னெடுத்து செல்கிறது என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்