செய்திகள்

துபாயில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா அறிகுறி

துபாயில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சீனா, இத்தாலி, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் படிப்படியாகப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 61 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக விமான நிலையத்தில் நடைபெற் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள திட்டச்சேரியை சேர்ந்த கார் ஓட்டுநரை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மருத்துவக்குழு அழைத்துச் சென்றது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்